திடீரென்று மின்னல் வேகத்தில் உருண்டு வந்த பாறை! கார்கள் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு!!
நாகலாந்தில் உள்ள மாலைப்பாதை ஒன்றில் திடீரென்று உருண்டு வந்த பாறை நின்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்ததில் கார்கள் நொறுங்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாகலாந்து மாநிலம் சுமௌகேடிமா மாவட்டத்தின் கோஹிமா-திமாபூர் நெடுஞ்சாலையில் நேற்று(ஜூலை4) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக சிவப்பு விளக்குகளை எரியவிட்ட படி நின்று கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென்று மின்னல் வேகத்தில் பாறை ஒன்று உருண்டு வந்து நின்று கொண்டிருந்த கார்களை தாக்கிச் சென்றது. கார்கள் சுக்கு நுறாக நொறுங்கியது. இதில் கார்களில் இருந்த இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்மவம் அனைத்தும் பின்பக்கம் நின்று கொண்டிருந்த காரில் உள்ள கேமராவில் பதிவாகியது. 2 பேர் பலியான நிலையில் மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்த விபத்தில் கார்க்குள்ளேயே ஒரு நபர் சிக்கி இருப்பதாகவும் அவரை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.