தமன்னாவின் ஹாட் டேன்ஸ்! தலைவரின் ஸ்டைல்! அனிருத் இசையில் இணையத்தில் டிரெண்ட் ஆகும் காவாலா!! 

0
126

தமன்னாவின் ஹாட் டேன்ஸ்! தலைவரின் ஸ்டைல்! அனிருத் இசையில் இணையத்தில் டிரெண்ட் ஆகும் காவாலா!!

 

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் நேற்று(ஜூலை6) மாலை வெளியானது.

 

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற தரமான வெற்றிப் படங்களை அமைதியாக கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை மட்டும் சிறிது சத்தம் போட்டு தோல்வியாக கொடுத்துவிட்டார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படமாவது வெற்றி பெற வேண்டும் என்பதே இயக்குநர் நெல்சன் அவருடைய ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

 

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் ஜூலை 6ம் தேதி வெளியாகும் என்று ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. காரணம் அனிருத் இசை ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை தமன்னாவிற்கு உரிய பாட்டு என்று புரோமோவில் இயக்குநர் நெல்சன் கூறிவிட்டார். அதுவே முதல் சிங்கிள் பாடல் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து நேற்று அதாவது ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு காவாலா பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் அருண் காமராஜ் காவாலா பாடலை எழுதியுள்ளார். சில்பா ராவ் இந்த பாட்டை பாடியுள்ளார். இந்த பாட்டுக்கு ஜானி மாஸ்டர் அவர்கள் கொரியோகிராப் செய்துள்ளார்.

 

நடிகை தமன்னாவின் ஹாட்டான டேன்ஸ் பாடலில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் பாடலில் நரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் டிரேட் மார்க் ஸ்டைலும் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் உள்ளது.

 

இயக்குநர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் இருக்கும் ‘கல்யாண வயசு வந்துருச்சு’ பாடலும், டாக்டர் திரைப்படத்தில் உள்ள ‘மெழுகு டால்’ பாடலும் பீஸ்ட் படத்தில் ‘அரபிக் குத்து’ பாடலும் செம்ம ஹிட் கொடுத்தது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Previous articleடிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!
Next articleஜூலை 7 ஆம் தேதி முதல்  800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!