மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் கடந்த ஓராண்டாக அனைத்து மாவட்டங்களில் நடந்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு முகாம் சேலம், வேலூர் , திருவண்ணாமாலை , நாமக்கல் , கோவை, சென்னை போன்ற மாவட்டங்களில் அலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக தகவல் வந்ததுள்ளது. மேலும் ஜூலை 21 வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இந்த முகாம் செங்கல்பட்டு மாவட்டம் ஐஏடி வழக்கத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த முகாவில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை கட்டயம் எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமை படித்து முடித்துவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.