குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காவாலா பட்டுக்கு ஆட்டம்… நன்றி தெரிவித்து பதிவிட்ட நடிகை தமன்னா!!

Photo of author

By Sakthi

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காவாலா பட்டுக்கு ஆட்டம்… நன்றி தெரிவித்து பதிவிட்ட நடிகை தமன்னா!!

Sakthi

Updated on:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காவாலா பட்டுக்கு ஆட்டம்… நன்றி தெரிவித்து பதிவிட்ட நடிகை தமன்னா!!

 

காவாலா பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைப் செய்து நடனம் ஆடி வரும் இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் காவாலா பாடல் மட்டும் இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது. அருண்ராஜா காமராஜ் அவர்கள் காவாலா பாடலை எழுதியுள்ளார். ஷில்பா ராவ் இந்த பாடலை பாடியுள்ளார். வைரலாகி வரும் காவாலா படலுக்கு திரைப் பிரபலங்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். நடிகை சிம்ரன், நடிகை காஜல் அகர்வால் ஆகியௌர் நடனமாடுவது போல ஏ.ஐ(AI) உருவாக்க வீடியோவும் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்துள்ளது.

 

இந்நிலையில் இந்த பாடலை டிரெண்டிங் செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நடிகை தமன்னா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “காவாலா பாடலுக்கு கிடைத்த அளவற்ற அதிக அன்பை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்னுடைய வேலைக்கு கிடைத்த அளவற்ற மிகப் பெரிய அன்பை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து காவாலா பாடலை வைரல் செய்த மற்றும் வைரல் செய்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.