சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘மூங்கில் யானை’ கூட்டம்!!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ‘ஜி -20’ நாடுகளின் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மாநாட்டின் ஒரு அங்கமாக கடந்த ஜூலை 24 ம் தேதி தொடங்கப்பட்ட ‘பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு’ மாநாடு நாளை நிறைவு பெறுகின்றது.
இந்நிலையில் நேற்று(ஜூலை 26) மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட்டனர் .
மேலும் நாளை (ஜூலை 28) ‘ஜி -20’ நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் குழுவினர் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து பார்வையாளர்களை கவருவதற்காக அங்குள்ள கோவில் பகுதி,புல்வெளி வளாகம் போன்ற இடங்களில் மூங்கில் பிரம்பில் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய யானை சிலை உருவங்கள் வைக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இவற்றை பார்ப்பதற்கு அச்சுஅசலாக வனத்தில் சுற்றித்திரியும் யானை கூட்டம் போல் காட்சியளிக்கின்றது என வியந்து சுற்றுலா பயணிகள் அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் .