இந்த உதவி எண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! இக்கட்டான சூழ்நிலையில் பயன்படும்!!
இக்கால கட்டத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவு அரங்கேறி வருகிறது அவர்கள் பாதுகாப்பிற்காக மத்திய அரசுகளின் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல பல்வேறு திட்டங்களையும் பல உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
பெண்கள் அனைவரது மொபைலில் இருக்க வேண்டிய மிக முக்கியமான உதவி எண்கள்.
1. பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் 181 அல்லது 1091 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
2. குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
3. வயதானவர்களுக்கு பிரச்சனை என்றால் 1253 அல்லது 14567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
4. நீங்கள் NH சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஏதேனும் பிரச்சனை என்றால் 1033 என்று எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
5. நிலநடுக்கம் அல்லது சுனாமி வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் 1077 அல்லது 1070 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
6. கடலோரப் பகுதிகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் 1093 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
7. சைபர் கிரைம் போன்ற குற்றங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
இதுபோன்ற உதவி எண்களை உங்கள் மொபைல் போனில் பதிவு செய்து கொண்டால் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போது உங்களுக்கு உதவியாக இருக்கும் இவைகள் அனைத்தையும் உங்களால் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் 112 என்ற எண்ணை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் இதில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தேவையான உதவிகளை தெரிந்து கொள்ள முடியும்.