டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு…

0
100

 

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு…

 

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் மொத்த விற்பனையில் 1 சதவீதம் குறைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய புதிய வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அறாமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையானது ஜூன் மாதத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.

 

அதாவது சென்ற(2022) ஆண்டு ஜூலை மாதம் 81790 கார்கள் விற்பனை ஆகி இருந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஜூலை மாதத்தில் 80633 கார்கள் விற்பனையாகி உள்ளது. இதனால் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தை விட இந்த ஆண்டு ஜூலை மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 சதவீதம் சரிவடைந்து இருக்கின்றது.

 

இது குறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஜூலை மாதத்தில் 78978 ஆக இருந்த நிலையில் அது தற்பொழுது 78844ஆக குறைந்துள்ளது. வர்த்தக வாகனங்களின் மொத்த விற்பனையானது 4 சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி 34154 வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆன நிலையில் தற்பொழுது விற்பனையானது 32944ஆக குறைந்துள்ளது.

 

உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனையானது கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தின் 47505 யூனிட்டுகளுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது 47628 யூனிட்டுகளாக உள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleநிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!
Next articleவங்க தேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்… இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல்…