ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி…
ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
தற்பொழுது தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்பொழுது ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் ஒரு.கிலோ தக்காளி 160 ரூபாய்க்கு தற்போதைய நிலவரப்படி விற்பனை ஆகின்றது.
புதுச்சேரியில் சமையலில் தக்காளியை பயன்படுத்தி வந்த மக்கள் தக்காளியின் விலை அதிகரிப்பால் தக்காளியை தவிர்த்து தக்காளி சாஸ் வாங்கி குழம்பு, சட்னி மற்றும் இன்னும் பிற சமையலுக்கு பயன்ப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் தக்காளி விற்பனை செய்து ஒரே நாளில் 4 இலட்சம் ரூபாய் சாம்பாதித்து உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஜோதியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயதாகும் இளம் விவசாயி வெங்கடேஷ் அவர்கள் கடந்த 5 வருடமாக தனக்கு(வெங்கடேஷ்) சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் தக்காளியை மட்டும் நடவு செய்து வருகிறார்.
இதையடுத்து சமீபத்தில் பத்து ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட 3900 கிலோ தக்காளியை விற்பனை செய்வதற்காக திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் சந்தைக்கு இன்று(ஆகஸ்ட்01) வாகனத்தில் கொண்டு வந்துள்ளார்.
3900 கிலோ தக்காளியை மொத்தம் 260 பெட்டிகளில் வைத்து சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தார். அந்த வகையில் ஒரு பெட்டி தலா 1550 ரூபாய் வைத்து விற்பனை செய்தார். இதையடுத்து 260 பெட்டிகளும் 1550 ரூபாய் வீதம் விற்பனை ஆனது. இதன் மூலம் இளம் விவசாயி வெங்கடேஷ் அவர்கள் 403000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து ஒரே நாளில் இளம் விவசாயி வெங்கடேஷ் அவர்களுக்கு 403000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதனால் இளம் விவசாயி வெங்கடேஷ் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.