தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…
தருமபுரி மாவட்டத்தில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்தா ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப் படவுள்ளது. ஆடி 18ம் தேதியை தான் ஆடி பெருக்கு என்று தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். ஆடி பெருக்கு கொண்டாடப்படும் நாளான ஆடி 18ம் தேதி மக்கள் அனைவரும் தங்களின் முன்னோர்களுக்கு ஆறு, கடல் போன்ற இடங்களுக்கு சென்று திதி கொடுப்பார்கள். அவ்வாறு திதி கொடுக்க முடியாதவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படையல் போட்டு ஆடி பெருக்கை கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் நாளை ஆடி பெருக்கு கொண்டாடப்படுவதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப் பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக சேலம், தருமபுரி மற்றும் பிற ஊர்களில் இருந்து பவானி கூடுதுறை, நீர்ப்பத்துறை, ஓகேனக்கல், டி.அம்மாபேட்டை, கொடுமுடி, மேட்டூர், கே.ஆர்.பி அணைக்கட்டு மோகனூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் ஆகிய பகுதிளுக்கு சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.