தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

0
85

 

தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு…

 

தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யப்படும் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று பழனி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகை தினம் கடவுள் முருகனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுகின்றது. கார்த்திகை தினம் அன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சிறப்பு வேண்டுதல்களும் மேற்கெள்ளப்படுகின்றது.

 

இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆடிக் கார்த்திகை தினம் பழனி முருகன் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த தினம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதையடுத்து ஆடிக் கார்த்திகை தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கோயிலில் சுமார் ஒரு கோடி பேருக்கு செல்போன் வாயிலாக அர்ச்சனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்கள் மூலமாக தற்பொழுது செய்திகள் பரவி வருகின்றது.

 

இந்நிலையில் சமூக வலைதளங்கள், இணையம் மூலமாக பரவும் பொய்யான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று பழனி கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

இது தொடர்பாக பழனி கோவில் நிர்வாகம் “இணயத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவும் பொய்யான தகவல்களை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். செல்போன் வாயிலாக ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படும் என்ற வசதி எல்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யான செய்தி. இதை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.