உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

0
155

 

உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்…

 

ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டதை அடுத்து 484 பேர் தாய்ப்பால் தானம் சொய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்தார்.

 

ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன்(ஆகஸ்ட்7) உலகத் தாய்ப்பால் வாரம் நிறைவு பெற்றது.

 

இதையடுத்து நடப்பாண்டில் கோவை அரசு மருத்துவமனைக்கு 484 பேர் 1280 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளனர் என்று கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா அவர்கள் கூறியுள்ளார்.

 

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் டீன் நிர்மலா அவர்கள் “உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்களுக்கும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் என கோவையில் 5 மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தாய்ப்பால் குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

 

மேலும் போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை குழந்தைகள் நலத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கோவை ரேஸ் கோர்ஸ் சாலை வரை தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

 

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

உலக தாய்ப்பால் வாரத்ததை முன்னிட்டு நர்சிங் பயிலும் மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டது. மேலும் ஸ்லோகன் எழுதும் போட்டி, விழிப்புணர்வு போஸ்டர் தயாரிங்கும் போட்டிநள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 484 பேர் மொத்தம் 1280 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளனர். தொடர்ந்து உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல தாய்மார்களும் கவுரவிக்கப்பட்டனர்” என்று கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா அவர்கள் கூறினார்.