டி20 போட்டிகளில் அதிக சதம்… பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் சாதனை…
டி20 முறையிலான போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் பாபர் அசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர் பாபர் அசம் அவர்கள் கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று(ஆகஸ்ட்7) நடைபெற்ற போட்டியில் கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் கல்லே டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
189 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பாபர் அசம் வென்றார்.
இந்த போட்டியில் கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய பாபர் அசம் சதம் அடித்து 104 ரன்கள் விளாசினார். பாபர் அசம் சதம் அடித்தது கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியது.
இந்நிலையில் பாபர் அசம் நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் பாபர் அசம் அவர்கள் தனது 10வது சதத்தை அடித்தார். டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த கறிஸ் கெயில் 22 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். பாபர் அசம் 10 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரன்டன் மெக்கல்லம் 8 சதங்களுடன் உள்ளார்.