மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…

Photo of author

By Sakthi

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…

 

தற்பொழுது நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பூ கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை முதல்(ஆகஸ்ட்15) அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்வீடன் அணியும், ஸ்பெயின் அணியும் விளையாடவுள்ளது.

 

இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்து ஸ்பெயின் அணி அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அன்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி ஸ்வீடன் அணி அரையிறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது.

 

ஆகஸ்ட் 12ம் தேதி சனிக்கிழமை இரண்டு காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றது. ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்ற முதல் காலிறுதிப் பேட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் போட்டியின் முடிவில் ஒரு கோலும் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

 

பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியா அணி 7 கோல்களும் பிரான்ஸ் 6 கோல்களும் அடித்தது. இதையடுத்து ஒரு கோல் அதிகம் அடித்த ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

 

நாளை(ஆகஸ்ட்15) தெடங்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பகுதியின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

நாளை மறுநாள்(ஆகஸ்ட்16) நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளது. 3வது மற்றும் 4வது இடத்துக்கான போட்டி சனிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறுகின்றது. நடப்பாண்டு மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தெடருக்கான இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ளது.