சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…

Photo of author

By Sakthi

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வீரர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

 

இங்காலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் 34 வயதான ஸ்டீவன் ஃபின் அவர்கள் தான் தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அவர்கள் இங்கிலாந்து அணிக்காக 2010ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முலம் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளிலும், 69 ஒருநாள் போட்டிகளிலும், 21 டி20 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 254 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அவர்கள் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக 2017ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கா எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதையடுத்து 6 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் ஸ்டீவன் ஃபின் விளையாடவில்லை.

 

கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

 

பின்னர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயின் அலி அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்பொழுது ஸ்டீவன் ஃபின் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செய்தியை கேட்ட ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.