இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு… முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு!!

0
118

 

இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு… முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு…

 

நடிகை சமந்தா சினிமா துறையில் அறிமுகமாகி இன்றோடு(ஆகஸ்ட்21) 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நடிகை சமந்தா அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் முதல் படப்பிடிப்பு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

நடிகை சமந்தா அவர்கள் 2010ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன், நடிகை திரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

 

அதன் பிறகு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிகை சமந்தா அவர்கள் நடித்து வந்தார்.

 

தமிழில் நடிகர்கள் விஜய், தனுஷ், சூரியா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், அதர்வா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது நடிகை சமந்தா அவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் நடிக்கத் தொடங்கி 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நடிகை சமந்தா அவர்கள் நடித்த முதல் திரைப்படம் குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

நடிகை சமந்தா அவர்கள் பகிர்ந்துள்ள அந்த பதிவில் “நியூயார்க் தான் கனவுகளை உருவாக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய முதல் படத்தின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது. அப்பொழுது சிறிய பெண்ணாக இருந்த நான்.இதை எப்படி செய்து முடிப்பேன் என்று எனக்கு கவலையாக இருந்தது. ஆனால் மிகப் பெரியா கனவுகளுக்கு தைரியம் மட்டுமே போதுமானது. இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு” என்று பதிவிட்டுள்ளார்.

 

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ஏ மாயசேசாவே என்ற திரைப்படம் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. நடிகை சமந்தாவின் காட்சிகள் அமெரிக்காவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில், ப்ரூக்களின் பாலம், மன்ஹாட்டனில் உள்ள சென்ட்ரல் பூங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleபாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!
Next article30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்!