சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

0
152

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

Udhayanidhi Stalin vs Anurag Thakur

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் பற்றி பேசியது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்திற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திமிர் கூட்டணி செயல்படும் விதத்தை பார்க்க வேண்டும்.

மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமி கொண்டாடத்தின் பொழுது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கற்கள் வீசப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டது. பீகார் மாநிலத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவர்களின் கடவுள் சீதா தேவியை பற்றியும் இராமாயணத்தை பற்றியும் எதிராக பேசினர்.

தற்பொழுது சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுகின்றனர். ஓபிசி மற்றும் ஹிந்துகளுக்கு எதிராக இந்த திமிர் கூட்டணியினர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஹிந்து விரோதிகள். சனாதன விரோதிகள். ஓபிசி விரோதிகள் ஆவார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கருத்தை திமுக கட்சியின் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்க்கவில்லை. திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் திமுகவின் கொள்கையிலும் எண்ணத்திலும் தான் இருகின்றனர்.

வெறும் ஓட்டுக்காக நீங்கள் சமூகத்தை பிரித்து அரசியல் ஆதயம் அடைவதற்கு கீழ்தரமாக செயல்படக் கூடாது. உங்கள் அரசு செய்த சாதனைகளை வெளிக்காட்ட நீங்கள் எதுவும் செய்யவில்லை. திமிர் கூட்டணியின் தலைவரையும் தேர்வு செய்ய முடியவில்லை. ஆனால் சமூகத்தை பிளவுபடுத்தும் விதமாக நீங்கள் செயல்படுகிறீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Previous articleதிருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்
Next articleஅண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்