இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!!
இந்தியாவில் ஜ20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு புது தில்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் என்று அழைக்கப்படும் இந்திய நுழைவு வாயிலின் அருகே நடைபயிற்சி மேற்கொள்ளவோ அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜி20 மாநாடு வருகிற செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 26 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியா கேட் என்று அழைக்கப்படும் இந்தியா நுழைவு வாயில் பகுதி முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவோ அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது என்றும் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை சிறப்பு ஆணையர் எஸ்.எஸ் யாதவ் “இந்தியா கேட் அருகிலும் ராஜாபாதை அருகிலும் பொதுமக்கள் யாரும் நடைப் பயிற்சி மோற்கொள்ளவோ அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது. இந்தியா கேட் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம்.
பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக மெட்ரோ நிறுவனத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். காலை 4 மணிமுதல் இரயில்களை இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார். ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி நகரம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.