வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சன்பிக்சர்ஸ்!!! எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!!

0
116
#image_title

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சன்பிக்சர்ஸ்!!! எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!!

தலைவர் 171 திரைப்படம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தலைவர் 171 குறித்த வதந்திகள்…

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 அதாவது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 171வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்றும் அந்த படத்தை கைவிட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

சன்பிக்சர்ஸ் வெளியிட்ட ஷாக்கிங் அறிவிப்பு…

இந்நிலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் மூழ்கி உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி…

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகப் போகும் தலைவர் 171 திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கிடைத்துள்ளது.

அதே கூட்டணியில் தலைவர் 171 திரைப்படம்…

இதற்கு முன்னர் விக்ரம் திரைப்படத்திற்கும் தற்பொழுது லியோ திரைப்படத்திற்கும் இசையமைத்த அனிருத் தலைவர் 171 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும் விக்ரம் திரைப்படத்திலும், தற்பொழுது லியோ திரைப்படத்தில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் தலைவர் 171 திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு பணியாற்றவுள்ளனர்.

எல்.சி.யூ தொடருமா என்ற எதிர்பார்ப்பு…

சாதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி பற்றிய தகவல்கள் பரவிய பொழுதே எல்.சி.யு கான்செப்டில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால் தற்பொழுது சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தலைவர் 171 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து எல்.சி.யு கான்செப்டுக்கு வாய்ப்பு கிடையாது என்றாலும் எல்.சி.யு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Previous articleஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleமாதம் 45000 ரூபாயில் தமிழக மீனவளப் பல்கலை கழகத்தில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பாருங்க!!!