ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!!

0
100
#image_title

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!!

நடப்பாண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நாட்டை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அவர்கள் பிரதானச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார்.

2023ம் ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று(செப்டம்பர்12) தேதி ஹாங்காங் நாட்டில் உள்ள கோலூன் நகரில் தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அவர்களும் மலேசிய நாட்டை சேர்ந்த ஜூன் ஹாவ் லியோங்க் அவர்களும் மோதினர்.

கிரண் ஜார்ஜ் அவர்களும் ஜூன் ஹாவ் லாயோங்க் அவர்களும் மோதிய இந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது. இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் ஜூன் ஹாவ் லியோங்க் அவர்கள் முதல் செட்டை 20-22 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அவர்கள் 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதனால் இறுதி செட் ஆட்டம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இறுதியில் மூன்றாவது செட்டை 14-21 என்ற புள்ளி கணக்கில் மலேசிய வீரர் ஜூன் ஹாவ் லியோங்க் அவர்கள் கைப்பற்றினார். இதன் மூலம் மலேசிய வீரர் ஜூன் ஹாவ் லியோங்க் அவர்கள் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 20-22, 21-14, 14-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தொடரை விட்டு வெளியேறினார். இதே போல முதல் சுற்றுக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் அவர்களும், இரண்டாவது சுற்றுக்கான ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ரவி அவர்களும் ஹாங்காங் நாட்டை சேர்ந்த வீரர் ஜாசன் குவான் அவர்களிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினர்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று(செப்டம்பர்13) நடைபெறுகின்றது. இதில் இந்தியாவை சேர்ந்த லக்சயா சென், ஆகர்ஷி கஷ்யப், மாள்விகா பன்சோத், பிரியன்ஷூ ரஜாவத் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

ஹாங்காக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று(செப்டம்பர்12) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சேம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleபள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை !!
Next articleதேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் மாதம் ரூ.34800/- ஊதியத்தில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!