சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!? 

0
70
#image_title

சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!?

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர் பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பி வாசு கூட்டணியில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக இயக்குநர் பி வாசு அவர்கள் 18 வருடங்களுக்கு பிறகு அறிவித்தார்.

அதன்படி தற்பொழுது சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்கினார். பேன் இந்தியா திரைப்படமாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் வெளியானது.

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம் கீராவாணி இசையமைப்பில் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 28ம் தேதி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பார்த்து விட்டதாகவும் படக்குழுவை பாராட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இது தொடர்பாக சந்திரமுகி 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்சன்ஸ் “மிகப்பெரிய வெற்றிப் படமான தன்னுடைய சந்திரமுகி திரைப்படத்தை வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு பி.வாசு அவர்களுக்கும் அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பதிவிட்டுள்ளதை லைகா நிறுவனம் சமூக வலைதளத்தில் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.