இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

0
74
#image_title

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்பர்ட் நோபல் என்ற விஞ்ஞானி அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பான்மை, மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும் நிலையில் நேற்று(அக்டோபர்2) முதல் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி முதல்நாளான நேற்று(அக்டோபர்2) மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று(அக்டோபர்3) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அதன்படி இயற்பியலுக்கான நோபல் பரிசானது பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.

இந்த நோபல் பரிசுடன் 8 கோடி ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படவுள்ளது. இந்த நாவல் பரிசு வழங்கும் விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆல்பர்ட் நோபல் அவர்களின் நினைவு நாளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

Previous articleடைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!!
Next article“நாட்டு நாட்டு”பாடலுக்கு வைஃப் செய்து ஆர்மிக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய பிடிஎஸ் ஜங்கூக்!!