இன்று நடிகர் விஜய் படம், நாளை நடிகர் அஜித் திரைப்படம்!!! பெரும் எதிர்பார்ப்பில் தலதளபதி ரசிகர்கள்!!!

Photo of author

By Sakthi

இன்று நடிகர் விஜய் படம், நாளை நடிகர் அஜித் திரைப்படம்!!! பெரும் எதிர்பார்ப்பில் தலதளபதி ரசிகர்கள்!!!
நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்3) தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நிலையில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்2) இடப்பட்டது. இதை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதையடுத்து தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்3) முதல் தொடங்கியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இதே போல நடிகர் அஜித் நடிக்கும் 62வது படமான விடாமுயற்சி திரைப்படம் குறித்த தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இரக்கமுள்ள நிலையில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றது.
இந்நிலையில் நடிகர் அஜித், நடிகை திரிஷா உள்பட விடாமுயற்சி படக்குழுவினர் இன்று(அக்டோபர்3) அஜர்பைஜான் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் நாளை முதல் அதாவது அக்டோபர் 4ம் தேதி முதல் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த பக்கம் தளபதி விஜய் நடிக்கும் தளபதி68 திரைப்படமும் அந்த பக்கம் தல அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படமும் தங்களது படப்பிடிப்பை தொடங்கியுள்ள நிலையில் இன்னொரு முறை நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.