விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்!

0
126
vidamuyarchi
vidamuyarchi

விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்!

நடிகர் அஜித் நடிப்பில்,இந்த வருடத்தின் (முதல் வாரத்தில்) வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இந்த துணிவு திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமினி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்கயுள்ளார் என்ற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வெளியானது.

இந்தச் தகவல்கள் வெளியாகினாலும் அஜித் குமாரின் இந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன.இதனால் இந்த திரைப்படமானது எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்களின் மத்தியில் அதிக கேள்விகள் எழுந்தது.இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பானது துபாயில் நடத்தலாம் என படக் குழுவினர் முடிவு செய்தனர். அதற்கேற்ப நேற்று மொத்த படக் குழுவினரும் துபாய்க்கு சென்றுள்ளனர்.

துபாய் நகரில் உள்ள அஜார் பைஜானியில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என்று நினைத்தபோது,அந்த இடத்தில் லோக்கல் பிரச்சனைகள் அதிகளவு காணப்பட்டது. இதனால் இந்த இடத்தில் படப்பிடிப்பினை தொடர்ந்து செய்து வந்தால் இன்னும் பிரச்சினையாகிவிடும் என்ற காரணத்தினால் துபாயிலிருந்து படக்குழு பட குழுவினர் அனைவரும் கிளம்பி விட்டனர்.

துபாயில் இருந்து கிளம்பிய பட குழுவினர் அனைவரும் அடுத்ததாக தாய்லாந்துக்கு சென்றார்கள் தாய்லாந்தில் படப்பிடிப்பிற்கான இடத்தை தேர்வு செய்து விட்டு, விரைவில் ஆரம்பிக்கலாம் முடிவு செய்துள்ளார்கள். இப்படத்திற்கான படப்பிடிப்பை துவங்குவதற்கு படக்குழுவினர் அனைவரும் தவிர்த்து வருகின்றனர்.

விடாமுயற்சி படப்பிடிப்பில் தான் இத்தனை பிரச்சனைகள் என்றாலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகயிருந்த ஹீமா சலீம் குரேஷி,அவர்கள் இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும்,இவரது கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி என்ற தலைப்பிற்கு ஏற்ப இப்படத்திற்கு விதவிதமான சோதனைகள் நிலவி வருகிறது.

Previous articleநடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
Next articleகமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்!