விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவது தான் மிகப்பெரிய பரிசு! நெதர்லாந்து பந்துவீச்சாளர் பேட்டி !!

0
98
#image_title
விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவது தான் மிகப்பெரிய பரிசு! நெதர்லாந்து பந்துவீச்சாளர் பேட்டி
சமீபத்தில் நெதர்லாந்து பந்துவீச்சாளர் ஆரியன் டட் அவர்கள் அளித்த பேட்டியில் நீங்கள் யாருடைய விக்கெட்டை வீழ்த்துவதற்கு விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு நெதர்லாந்து பந்துவீச்சாளர் ஆரியன் டட் அவர்கள் சுவாரஸ்யமான பதில் ஒன்றை கூறியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்றுக்கான குவாலிபையர் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் 10 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதையடுத்து நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் வங்கதேச அணியுடனான லீக் சுற்றில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்றில் நெதர்லாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. மீதம் உள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
நெதர்லாந்து அணி அடுத்து விளையாடவுள்ள மூன்று போட்டிகளில் நவம்பர் மூன்றாம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் நவம்பர் 3ம் தேதியும், நவம்பர் 8ம் தேதி இங்கிலாந்து அணியுடனும், நவம்பர் 12ம் தேதி இந்திய அணியுடனும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளரிடம் நீங்கள் யாருடைய விக்கெட்டை கைப்பற்ற ஆர்வமாக உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நான் விராட் கோஹ்லி அவர்களின் விக்கெட்டை கைப்பற்ற ஆர்வமாக இருக்கின்றேன் என்று கூறினார்.
இது தொடர்பாக அந்த நேர்காணலில் பந்துவீச்சாளர் ஆர்யன் டன் அவர்கள் “விளையாடும் போட்டிகளில் விக்கெட்டை வீழ்த்துவது என்பது முக்கியமான ஒன்றுதான். ஆனால் யாருடைய விக்கெட்டை வீழ்த்துவது என்ற கேள்விக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்றால் இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோஹ்லி அவர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்றுதான்  நான் கூறுவேன்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்களின் விக்கெட்டை வீழ்த்துவது தான் என்னுடைய குறிக்கோள். அதுதான் இந்த உலகக் கோப்பை தொடரில் எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பரிசு” என்று கூறியுள்ளார்.
Previous articleதீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!
Next articleபாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!