அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி என்றாலே போட்டிதான். இந்த படம் வெளியாகி இத்தனை நாள் ஓடுகிறது. இந்த படத்தை இப்படி இயக்க வேண்டும் . இந்த படத்திற்கு இப்படி பாடல்கள் வேண்டும். சண்டைக் காட்சிகள் வேண்டும் என்று பல்வேறு விதமான போட்டிகள் திரையுலகில் இருந்து தான் வருகின்றது.
இப்பொழுது ரஜினி கமல் ,விஜய் அஜித் என்று வரிசைகள் உள்ளன. சிவாஜிக்கு என்று தனியாக ஒரு பேன் பேஸ் உள்ளது அதேபோல் எம்ஜிஆருக்கு தனியான ரசிகர்கள் உள்ளார்கள்.
சரோஜாதேவி அவர்கள் நிறைய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள். சரோஜாதேவி அவர்கள் சிறிய நடன கலைஞராக இருந்து அதன் பின் கேமராக்களில் அவரது முகம் மிகவும் அழகாக தெரிந்தது என்பதால் அன்றைய காலத்தில் இயக்குனர்களால் கண்டறியப்பட்டு அவர் மாபெரும் நடிகையாக இருந்தார் .
முதலில் சின்ன கேரக்டர்கள் இருந்தால் போதும் என நினைத்த சரோஜாதேவிக்கு, அவரது முதல் படத்தில் அப்பொழுது 3 ரானிகளில் ஒருவராக நடனம் அட வேண்டும், மாநிறமாக இருக்கிறார்கள் என்று கருதிய பொழுது, அதன் பின் ஒப்பனைகள் மேக்கப் அனைத்தும் செய்து வந்து கேமரா முன் நிற்கும் பொழுது அவ்வளவு அழகாக இருந்தாராம் சரோஜாதேவி. இவரது முகம் கேமராவில் மிகவும் அழகாக தெரிகிறது அதனால் படத்திற்காக அடுத்த பத்து படங்களுக்கு புக் செய்து விடு என்று முதல் இயக்குனர் சொல்லியது இன்னும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜிக்கு இரண்டு மகன்கள் உண்டு ஒன்று இளைய திலகம் பிரபு மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் ராம்குமார் அவர்கள்.
ஒரு முறை இரண்டு மகன்கள் யாரைப் பார்த்தால் சிவாஜி போல இருக்கிறார்கள் என்றபோது , இளைய திலகம் பிரபு அவரை போலவே நடை உடை அனைத்தும் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்த நேரம் அது.
அப்பொழுது சரோஜாதேவி எனக்கு இளைய திலகம் பிரபுவை பார்த்தால் கமலா அம்மாதான் ஞாபகம் வரும். ஏனென்றால் அவர் கன்னத்தில் குழி விழும் அது கமலா அம்மாவிற்கு தான் கன்னத்தில் குழி விழும். அதனால் அவரை போல தான் இருக்கும்.
ஆனால் பெரியவர் ராமகுமாரை பார்க்கும் பொழுது தான் அப்படியே சிவாஜி போல இருக்கும் என்று கூறியவுடன், சிவாஜி நான் என்ன அவ்வளவு குண்டாகவா? இருக்கிறேன் என்று சொல்லி கிண்டல் செய்தாராம்