திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார்

0
114
VP Duraisamy Joined In BJP-News4 Tamil Online Tamil News
VP Duraisamy Joined In BJP-News4 Tamil Online Tamil News

திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்தவரும் முன்னாள் சபாநாயகருமான வி.பி. துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

திமுக தலைமையால் சில மாதங்களாக அக்கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வந்த திமுக துணைப் பொதுச்செயலாளரான வி.பி.துரைசாமி, கடந்த வாரம் தமிழக மாநில பாஜக தலைவர் முருகனை சந்தித்து பேசினார்.  திமுகவின் முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர் தமிழக பாஜக தலைவரை சந்தித்து பேசியது தமிழகஅரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  சூழ்நிலையை புரிந்து சுதாரித்து கொண்ட திமுக தலைமை நேற்று திடீரென அவரை துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான துரைசாமி, இன்று பாஜகவில் இணையபோவதாக அறிவித்தார்.

இதனையடுத்து இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலவலகத்துக்கு சென்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை  சந்தித்து பாஜகவில் இணைந்து கொண்டார்.

ஆரம்பத்தில் அதிமுகவின் மூலமாக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வி.பி.துரைசாமி, அப்போது தான் வகித்த தனது ராஜ்யசபா எம்.பி.பதவியை துறந்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த அவருக்கு கருணாநிதி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் துணை சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது அந்த பதவிகளை உதறிவிட்டு திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

Previous articleEMI செலுத்த மேலும் அவகாசம் – சலுகையை நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Next articleஆட்டோக்களை இயக்க அனுமதியளித்த தமிழக அரசு – நிபந்தனைகள் என்ன தெரியுமா?