நேற்று பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 99 பயணிகளுடன் கராச்சி வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 பயணிகள் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், விமானம் முழுவதும் எரிந்து சாம்பலானது . இதில் பயணம் செய்த 99 பயணிகள் 8 ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த விபத்தில் பலியானார்கள்.இந்த தகவலை கராச்சி மேயர் உறுதிப் படுத்தினார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.