பணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு! 

0
188
Money can buy but vote for the good guys! Actor Vijay Antony talk!
Money can buy but vote for the good guys! Actor Vijay Antony talk!

பணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு!

ரோமியோ திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க. ஆனால் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ரோமியோ திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகவுள்ளது.ரோமியோ திரைப்படத்தை இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை மிர்ணாளினி ரவி அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். ரோமியோ திரைப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக நடிகர் விஜய் ஆண்டனி அவர்களே தயாரித்துள்ளார்.இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் ரோமியோ திரைப்படத்தை பற்றி பேசினார்.

இதையடுத்து ரோமியோ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் “ரோமியோ திரைப்படம் காதல் மற்றும் திருமணத்திற்கு பின்னர் கணவர் மனைவி இருவருக்கும் இடையேயான உறவு பற்றி பேசி இருக்கின்றது. கண்டிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.ஒவ்வொரு கணவரும் மனைவியை ரோமியோ திரைப்படத்திற்கு அழைத்து வர வேண்டும்” என்று கூறினார்.

மேலும் ரோமியோ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் “இந்த போஸ்டரை திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியாக வைத்துள்ளோம். இதனால் கலாச்சார சீர்குலைவு போன்ற எதுவும் திரைப்படத்தில் புகுத்தப்படவில்லை.பெண்கள் வந்து ஆண்களுக்கு மேலானவர்கள் ஒரு ஆண் தோல்வி அடையும் பொழுது ஆணுக்கு  ஆறுதல் தெரிவித்து அவரை தேற்றுவது பெண்கள் தான்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனியிடம் அவருடைய அரசியல் கட்சி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் “நாம் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம்.மேலும் எந்த கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வறுமை, ஏழ்மை காரணமாக வாங்கிக் கொள்ளலாம்.அது தவறில்லை.ஆனால் பணம் கொடுத்த கட்சிக்குத் தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது.நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள்” என்று கூறினார்.

Previous articleநடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!
Next articleநெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை!