பெண்களே உங்களுடைய உதடுகள் மென்மையாக மாற வேண்டுமா? அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க!
பெண்களின் உதடுகள் மென்மையாக மாற்றுவதற்கு தேனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் தன்னுடைய உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவுக்கு முகத்தின் அழகிற்க்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சருமத்தின் பாதுகாப்பிற்கு மிகுந்த அளவு பணத்தை செலவு செய்யும் பெண்கள் உதடுகளின் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த செலவு செய்கிறார்கள்.
உதடுகள் கருமையாக இருந்தால் அதை தற்காலிகமாக சிவப்பு நிறமாக மாற்ற லிப்ஸ்டிக் போன்ற சாயங்களை உதடுகளில் தேய்த்து கொள்கிறார்கள். இது நாளடைவில் உதடுகளுக்கு நன்மையை தருகின்றதோ இல்லையோ தீமைகளை தந்துவிடும்.
மேலும் ஒரு சில பெண்களுக்கு உதடுகள் மென்மையாக இருக்காது. அவர்கள் அனைவருக்கும் உதடுகளை மென்மையாக மாற்ற உதவும் அருமையான வழிமுறையை பற்றி இந்த பதிவில் தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பாலாடை
* தேன்
செய்முறை:
பசும்பாலை சுண்டக் காய்ச்சும் பொழுது வரும் பாலாடையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேன் சிறிது அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒரு சிறிய பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். உதடுகளை மென்மையாக்கும் மருந்து தயார்.
இந்த மருந்தை உதடுகளில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 10 நிமிடம் கழிந்து தண்ணீரால் கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். மேலும் உதடுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.