பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்..! என்ன செய்யலாம்..!

0
405
Pitru Dosham
#image_title

Pitru Dosham: நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது முன்னோர்கள் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு சில நிகழ்வுகளை வைத்து நமக்கு என்ன மாதிரியான நிகழ்வு வாழ்க்கையில் நடந்துக்கொண்டிருக்கிறது என்று முன்னதாகவே வகுத்து வைத்துள்ளனர். இதனை நாம் மூட நம்பிக்கை என்று எண்ணிவிடாமல் சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சொல்வற்கான காரணங்கள் என்னவென்று தெரியும்.

அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை திதி முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை திதியில் இறந்து போன நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என்பது அவசியமான ஒன்று. ஆனால் காலப்போக்கில் நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய கடமையை நாம் மறந்துவிடுகிறோம். இதனால் பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகளை (pitru dosha arikurigal) நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிகுறிகள் – Pitru Dosha Pariharam in Tamil

ஒருவருக்கு அவர்களின் முன்னோர்கள் ஆசி இல்லையென்றால் வாழ்க்கையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவார்கள். பின்வரும் ஐந்து அறிகுறிகளை வைத்து பித்ரு தோஷம் உள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

  1. நீங்கள் உண்ணும் உணவில் முடி கிடந்தால் உங்களின் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை இது உணர்த்துகிறது.
  2. நீங்கள் இருக்கும் இடத்தில் துர்நாற்றம் அதாவது வித்தியாசமான வாசனையை உணர்ந்தால் உங்களுக்கு பித்ருக்களின் தோஷம் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த வாசனையை நீங்கள் பொதுவாக அடிக்கடி உணர்ந்தால் உங்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடவும்.
  3. நீங்கள் திடீரென்று பணத்தை இழந்தால் அது பித்ரு தோஷத்தின் அறிகுறியாகும். மேலும் இதன் மூலம் வீட்டில் நிம்மதி இல்லாமல் எப்பொழுதும் ஏதோ சங்கடமான சூழ்நிலைகள் நிலவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
  4. உங்கள் கனவில் அடிக்கடி இறந்து போன உங்கள் முன்னோர்கள் வந்தால், நிச்சயம் இது அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துகிறது. அதிலும் கனவில் பித்ருக்கள் அழுவது நல்லதல்ல.
  5. பார்க்கும் வேலையில் தடங்கள், செய்யும் தொழிலில் நஷ்டம் போன்றவை பித்ருக்களின் தோஷத்தின் அறிகுறியாகும்.

பரிகாரம்

  • அமாவாசை நாட்களில் இறந்து போன உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகும். அவர்கள் இறந்த நாளை மறந்துவிடாமல் அவர்களுக்கு தர்பணம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் ஆசி கிட்டும் என்பது ஐதீகம்.
  • வெள்ளி, செவ்வாய் அன்று வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
Previous articleஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Next articleஉறை மோர் இல்லையா? இனி சுலபமாக வீட்டிலேயே தயிர் தயார் செய்யலாம்..!