ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!!
ஏழைகளுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு நாங்கள் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் தொகுதியில் நேற்று(மே6) தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி அவர்கள் “தற்பொழுது சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. அதுவும் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு உச்ச வரம்பு 50 சதவீதம் என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த உச்ச வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி ஏழைகள், தலித், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள் ஆகியோர்களுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
பாஜக கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இணைந்து அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றது. ஆகவே இந்த தேர்தல் நம்முடைய நாட்டின் அரசியல் சாசனத்தை காப்பாற்ற நடத்தப்படும் போர் ஆகும்.
தற்பொழுது நடைபெற்று வரும் தேர்தல் தான் நமக்கு நிலம், நீர், காடு ஆகியவற்றுக்கான உரிமைகளை வழங்குகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த உரிமைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று நினைக்கிறார். இந்த உரிமைகளை அகற்ற வேண்டும் என்பதற்கான அதிகாரம் அவருக்கு தேவைப்படுகின்றது. அதனால் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறார்.
இடஒதுக்கீடு பிரச்சனையை நீக்குவோம் என்று பாஜக கட்சியினர் தற்பொழுது கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 50 சதவீதம் வரம்பை நீக்கி அதுக்கும் மேல் இடஒதுக்கீட்டை அதிகரிப்போம்” என்று கூறியுள்ளார்.