Breaking News, Cinema

7 வருடங்களாக பாடாத பாடகி ஜானகி அம்மா..! இதுதான் காரணமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. !

Photo of author

By Priya

7 வருடங்களாக பாடாத பாடகி ஜானகி அம்மா..! இதுதான் காரணமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. !

Priya

Button

Singer Janaki: இந்தியாவின் நைட்டிங் கேல் என்று அழைக்கப்படுபவர் தான் பாடகர் ஜானகி. இவர் தென்னிந்தியாவின் இசையரசி என்று அன்போடு அழைக்கப்படுவர் தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 17 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே தான் கூறவேண்டும். ஜானகி அம்மா தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார். பிறகு சென்னையில் வந்து குடியேறினார். தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்ததால் இவர் இசையை முறையாக பயின்றுள்ளார்.

சென்னைக்கு குடிவந்த பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவில் இணைந்து திரைப்படத்துறையில்  பல பாடல்களை பாடி உள்ளார். இவர் தமிழில் பாடிய முதல் பாடல் “பெண் என் ஆசை பாழானது ஏனோ” என்ற பாடலை பாடினார். இவர் பாடிய பிறகு தெலுங்கு படத்தில் பாடல் பாடும் வாய்ப்பை பெற்றார். இவர் குழந்தையாகவும், வயதானவர் போன்றும், குமரியாகவும் பாடும் திறமைக்கொண்டவர். இளையராஜா, எம் எஸ் வி, ஏ ஆர் ரகுமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பாடல்களை பாடியுள்ளார்.

இவர் 4 முறை தேசிய விருதும், தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கெளரவித்துள்ளது. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்து தன் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் குடியேறி வசித்து வந்தார். இந்நிலையில் தான் அவர் திரையுலகில் இருந்து விலகியதற்கான காரணம் பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனக்கு திறமை இருக்கு என்பதற்காக நான் மட்டுமே பெயரையும், புகழையும் வாங்குவதால் ஒன்றும் ஆகா போவதில்லை. வருங்கால சந்ததியினருக்கும் வழி கொடுக்க வேண்டும் என்றும் என்னை மற்றவர்கள் குறை கூறுவதற்வதற்கு முன்பே தானாகவே ஒதுங்கிவிட வேண்டும் என்று அந்த வீடியோவில் (singer janaki viral video) குறிப்பிட்டிருப்பார்.

ஜானகி அம்மா கடைசியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா பாடல் பாடி, அது மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அப்பா இறந்ததற்கு கூட போகல.. தவறா பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய கோவை சரளா..!   

Boys Movie: ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல இசையமைப்பாளர்..!

படையப்பா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட தளபதி..! ஆனாலும் நிறைவேறிய கனவு..!