முருகனின் பாதம் காண இங்கு வாருங்கள்..ஞான மலையில் இருக்கும் முருகப்பெருமான்..!

0
171
Gnanamalai Murugan Temple
#image_title

Gnanamalai Murugan Temple: தமிழ் கடவுளாக போற்றபடுவர் தான் முருகப்பெருமான். முருகபெருமானுக்கு உலகெங்கிலும் கோயில்கள் உள்ளன. அதிலும் அவரின் ஆறுபடை வீடுகள் என்றாலே தனிச்சிறப்பு தான். முருகபெருமானுக்கு கோயில்கள் பல உள்ளன. ஒவ்வொரு கோயில்களும் தனி சிறப்பு பெற்ற கோயில்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் கோயில் தான் ராணிபேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஞானமலை. இந்த ஞானமலையில் தான் முருகபெருமானின் பாத அடியும், அவரின் வாகனமான மயிலின் பாத அடியும் இருக்கிறதாம்.

இக்கோயிலை 14-ஆம் நூற்றாண்டில் சம்புவராயர் காலத்து காளிங்கராயர் இளவரசரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்துக்கொண்டு, வள்ளி மலையில் இருந்து திருத்தணிக்கு செல்லும் வழியில் இந்த ஞானமலையில் தங்கியதாக ஒரு தகவல் உண்டு.

இந்த ஞானமலையில் ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் மட்டும் இல்லாமல் அவரை தேடி செல்லும் அனைத்து மக்களுக்கும் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். திருவண்ணாமலை சென்று உயிர் விட நினைத்த அருணகிரிநாதரை தனது பொற்கரங்களால் முருகப்பெருமான் தாங்கியது இந்த மலை தான் என்று கூறப்படுகிறது. அருணகிரிநாதருக்கு தனது வேலினால் “சரவணபவ” என்ற மந்திரத்தை அவருக்கு குறிப்பிட்டதும் இந்த மலையில் தான் என்பதும் ஒரு கருத்து இருக்கிறது.

இதனை அருணகிரிநாதர் முருகப்பெருமானை நினைத்து பாடிய திருப்புகழ்ப் பாடல்களில் 1,328 பாடல்கள் நமக்குக் கிடைத்தவை. இந்த தலத்தை பற்றி அவர் அப்போதே பாடியுள்ளார் என்பதும் ஒரு தகவலாகும்.

Gnanamalai Murugan Temple

அழகான இயற்கை சூழ்நிலைக்கொண்டது இந்த தலம். தனிமை விரும்புபவர்கள் இந்த ஞானமலைக்கு ஒருமுறை வந்து இந்த கோயிலை தரிசித்தால் நிச்சயம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். இந்த ஞானமலையை சுற்றி ஏரி, வயல்கள் அதிக அளவிலான வேப்ப மரங்களும் இங்கு உள்ளன.

மேலும் படிக்க: பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்..! என்ன செய்யலாம்..!