Date of Birth Astrology in Tamil: நமது ஜோதிட சாஸ்திரம் பல வகைகளை கொண்டிருந்தாலும், அதில் எண் கணித ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்கள் எப்படி பட்ட குணாதிசயங்களை கொண்டுள்ளார்கள் என்று நாம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்களில், 9 கிரகங்கள் அமைந்திருக்கும்.
நமது ஜோதிட சாஸ்திரம் பல வகைகளை கொண்டிருந்தாலும், அதில் எண் கணித ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டுள்ளார்கள் என்று நாம் அறிந்து (Birth Date Reveals Personality in Tamil) கொள்ளலாம்.
ஒருவரின் ஜாதக அமைப்பை பொறுத்து, எந்த கிரகத்தின் பெயர்ச்சியால் என்ன பலன்கள் கிடைக்க போகிறது என்று கணிக்க முடியும். ஒரு கிரகத்தின் பெயர்ச்சி அந்த ஜாதக்காரரின் பிறந்த நேரம், லக்னம் வைத்து அவரின் எதிர்கால பலன்களை கணிக்க முடியும்.
இவ்வாறாக பல வகை சாஸ்திரங்களை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க உதவுகிறது. அந்த வகையில் எண் ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவரின் குணங்கள் எப்படி (Birthday Personality Traits in Tamil) இருக்கிறது என்று இந்த பதிவில் காண்போம்.
ஞாயிற்று கிழமை
இந்த கிழமையில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆசி இவர்களுக்கு இருக்கும். தலைமை பண்பு இவர்களிடம் இருக்கும். யாருக்கும் இவர்கள் அடி பணிய மாட்டார்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். இவர்களிடம் பணம் இல்லை என்றாலும் இவர்கள் வெளியில் கட்டிக்கொள்ள மாட்டார்கள். இவர்களால் ஒரு விஷயம் முடியாத பட்சத்தில் அமைதியாக இருப்பார்கள்.
திங்கள்
இவர்கள் சந்திரனை குறிக்க கூடிய திங்கள் கிழமையில் பிறந்தவர்கள். இவர்கள் எப்போதும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இவர்களின் தோற்றம் அழகாகவும், ஒழுக்கமாகவும் திகழ்வார்கள். இவர்கள் எந்த வேலையை எடுத்துக்காெண்டாலும் அதில் விடாமுயற்சி எடுத்து வெற்றி காண்பார்கள். சொந்த தொழில் செய்து முன்னேர்வார்கள். இவர்களுக்கு அவர்கள் நினைத்தப்படி காதல், நட்பு அமையும்.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கடின உழைப்புடன் விடாமுயற்சியுடன் ஆதிக்கம் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தால் இவர்கள் கடின உழைப்பாளிகளாக திகழ்வார்கள். இவர்கள் அவர்கள் செய்யும் விஷயங்கள் குறித்து பலரிடம் ஆலோசனை கேட்பார்கள். ஆனால் இறுதியாக பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்து இறுதி முடிவு எடுத்து அதில் வெற்றியும் காண்பார்கள். ஒருவரை அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். ஆனால் ஒருவரை நல்லவர் என இவர்கள் நினைத்து விட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்கள் நியாயம், தர்மம், நேர்மை என இருப்பதால் பலருக்கும் இவரை பிடிப்பதில்லை. கெட்டவர்களுக்கு இவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி இவர்களுக்கு எப்பொழுதும் கவலை இல்லை.
புதன்கிழமை
புதன்கிழமையில் பிறந்தவர்கள் கல்வி அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். ஏனெனில் புதன் கிரகம் தான் கல்வியையும், செல்வதையும் தரக்கூடியதாக ஒருவரின் ஜாதகத்தில் அமைகிறது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையுடனே இருப்பார்கள். உண்மையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். மேலும் கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேறி அதில் வெற்றியும் அடைவார்கள். இவர்கள் மற்றவர்கள் மனதில் இருக்கக்கூடியதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். இவர்கள் பொதுவாக படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் தான் இருப்பார்கள். எழுத்தாளராக, பேச்சாளராக, நீதிபதியாக, வக்கீலாக இருப்பார்கள். இவர்களுக்கு பேச்சுத் திறமை அதிகம் உண்டு. இவர்கள் பலரால் ஈர்க்கப்படுவார்கள். அதனால் இவர்கள் காதலில் சுலபமாக விழும் விடுவர்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையை சரியாக தேர்ந்தெடுத்தால் நல்ல வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.
வியாழன்
வியாழக்கிழமை பிறந்தவர்கள் குரு பகவானின் ஆசி பெற்று விளங்குவார்கள். இவர்கள் எப்பொழுதும் நேர்மையுடன் இருப்பார்கள். மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு இவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இவர்கள் அதிகமாக கோபப்பட்டாலும் பெரிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எதையும் மறைமுகமாக பேசி பழக்கம் இல்லை. நேர்மையாக செய்து தான் பழக்கம். மேலும் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். அதனால் பலரின் மனது இவர்களால் காயப்படும். ஆனால் இவர்கள் ஒருவருக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அன்பாகவும் விளங்குவார்கள்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை பிறப்பவர்கள் சுக்கிர பகவானின் ஆசி பெற்று இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு வசீகரமான தோற்றுத்துடன் காணப்படுபவர்கள். இவர்களின் அனைத்து செயல்களும் மற்றவர்களை கவர வேண்டும் என்று இருக்கும். இவரின் பேச்சு கேட்காதவர்களை இவர்கள் எப்பொழுதும் மதிப்பது இல்லை. இவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலை முழு மனதுடனும், நேர்மையாகவும் செய்தால் அதில் கண்டிப்பாக வெற்றியும் காண்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு சின்ன பிள்ளைகள் போன்ற நடவடிக்கைகள் இருந்தாலும் உண்மையில் இவர்களுக்கு தைரியமும், நேர்மையும் அதிகமாக இருக்கும். இவர்களின் திருமண வாழ்க்கையில் இவர்களின் துணை இவர்களுக்கு துணையாகவும், அன்பாகவும் ஆதரவாகவும் விளங்குவார்கள்.
சனிக்கிழமை
இந்த கிழமையில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சனி பகவான் போன்றவர்கள் ஏனெனில் இவர்களுக்கு நேர்மையாக இருந்து தான் பழக்கம். உண்மையாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள். எளிதில் இவர்களுக்கு நண்பர்கள் அமைவார்கள். உண்மைக்கு புறம்பான விஷயங்களை செய்ய மாட்டார்கள்.
மேலும் படிக்க: முருகனின் பாதம் காண இங்கு வாருங்கள்..ஞான மலையில் இருக்கும் முருகப்பெருமான்..!