80ஸ் 90ஸ் ஸ்பெஷல் குச்சி சிப்ஸ்.. மொறு மொறுனு 5 நிமிடத்தில் செய்யலாம்..!

0
203
Kuchi chips

Kuchi chips: எல்லோருக்கும் மாலை நேரத்தில் காரமாக, சூடாக, மொறுமொறுனு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டு, டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அதிலும் மழைக்காலம் வந்து விட்டால் போதும் கட்டாயம் சூடாக வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் போதும் என தோன்றும். மேலும் குழந்தைகளுக்கு கடைகளில் சிப்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுப்போம். அந்த வகையில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு சிப்ஸ் என்றால் அது மரவள்ளிக்கிழங்கில் செய்யப்படும் குச்சி சிப்ஸ் தான்.

தற்போது உருளைக்கிழங்கில் ப்ரென்ச் ப்ரை எப்படி உள்ளோதோ அதே 80ஸ், 90ஸ் காலத்தில் இந்த குச்சி சிப்ஸ் தான் ப்ரென்ச் ப்ரை.. இதனை தற்போது வீட்டில் எப்படி செய்யலாம் என்று (Kuchi chips recipe in Tamil) பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக்கிழங்கு – 2
  • மிளகாய் தூள் – 1ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிப்ஸ் செய்வதற்கு நல்ல வேர் இல்லாத மரவள்ளிக்கிழங்கை பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதன் தோலை நன்றாக செதுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நீரில் கழுவி ஒரு துணியை வைத்து ஈரம் இல்லாமல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது மரவள்ளிக்கிழங்கை இரண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும். சிப்ஸ் துருவும் கட்டையில் வைத்து தடிமனாக, ஒரே அளவாக (சதுரம்) சீவி வைத்துக்கொள்ளவும். இப்போது குச்சி சிப்ஸ்க்கு ஏற்றவாறு நீள, நீளமாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை போட்டு பொறித்துக்கொள்ள வேண்டும். நன்றாக பொறிந்ததும் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது மொறு மொறு குச்சி சிப்ஸ் (maravalli kilangu chips) தயார். இதனை காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: கோதுமை வெங்காய போண்டா..!! செம டேஸ்டா செய்யலாம் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்..!!