இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான்! காரணம் என்னவென்று தெரியுமா?
அடுத்து தொடங்கவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் லீக் போட்டி நடைபெறுமா இல்லையா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாம்.
உலகமே எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் உலகக் கோப்பை தொடரை விட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
காரணம் என்னவென்றால் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் போல பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதோ அல்லது இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதோ கிடையாது. இது தான் அந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
ஐசிசி நடத்தும் முக்கியமான தொடர்களில் மட்டுமே அதாவது ஐசிசி சேம்பியன் டிராபி, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர், ஐசிசி டி20 தொடர், ஆசியா கோப்பை தொடர் போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றது.
இரண்டு அணிகளும் அதாவது இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2013ம் ஆண்டு இந்தியாவில நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதன் பிறகு தற்பொழுது வரை ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தெடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க் நகரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இந்த போட்டி குறித்து அச்சம் தரக்கூடிய ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்த தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கு இடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு போலீசார் பெறும் பாதுகாப்பை செய்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து நாசாவ் கவுண்டி போலீஸ் கமிஷனர் பேட்ரிக் ரைடர் அவர்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் பொழுது தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று மிரட்டல் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் இது குறித்து நியூயார்க் ஆளுநர் விளக்கம் கெடுத்துள்ளார்.
இது குறித்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாதுகாப்பு பணியில் எங்களுடைய பாதுகாப்பு படையும் சட்ட அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் போட்டியை காண வரும் மக்கள் ஆகியோர்களின் பாதுகாப்பு மீது நாங்கள் முழுகவனம் செலுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் தீவிரவாத அச்சுறுத்தல் என்ற தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.