தோசை மாவு இல்லையா? தக்காளி இருந்தால் போதும் சுவையான தக்காளி தோசை ரெடி..!!

0
184
Thakkali Dosai

Thakkali Dosai: பெரும்பாலும் நம் வீடுகளில் காலையும் இரவும் இட்லி, தோசை என்று டிபன் வகைகள் தான் இருக்கும். அதிலும் தோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இட்லியை விட விரும்பி தோசை தான் சாப்பிடுவார்கள்.

தோசையில் பல வகையான வகைகள் உள்ளன. மசாலா தோசை, முட்டை தோசை, கறி தோசை என்று பல வகைகளில் தோசைகள் உள்ளன. நமக்கு வெறும் தோசை சுட்டு சட்னி வைத்து கொடுத்தாலே போதும் குறைந்தது ஐந்து தோசைக்கு மேல் சாப்பிடுவோம்.

சில நேரங்களில் தோசை மாவு அரைப்பதற்கு மறந்து விடுவோம். அந்த நேரத்தில் இந்த தக்காளி தோசையை ட்ரை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி (thakkali dosai eppadi seivathu) சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 2பல்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
ரவை – 2ஸ்பூன்
கோதுமை மாவு – 1/4 கப்
அரிசி மாவு – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு

செய்முறை

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளியை நறுக்கி அதில் போடவும். எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும், இரண்டு பல் பூண்டையும், சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஒரு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து தோசை போன்று ஊற்றி இருபுறமும் திருப்பி எடுத்தால் சுவையான தக்காளி தோசை தயார்.

மேலும் படிக்க: இனி தோசைக்கு மாவு அரைக்க தேவையில்லை.. !!இந்த தோசை ட்ரை பண்ணி பாருங்க..!!

Previous articleவீட்டில் வளர்க்க கூடாத செடிகள் மற்றும் மரங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!!
Next articleCentral Government Job: UIDAI ஆதார் நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் ரூ.1,12,400 ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!