பிரமாண்ட இயக்குனருடன் இணையப்போகும் தல? ரசிகர்களுக்கு காத்திருக்கும் நியூ அப்டேட்!!    

 

பிரமாண்ட இயக்குனருடன் இணையப்போகும் தல? ரசிகர்களுக்கு காத்திருக்கும் நியூ அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் சங்கர். இவரின் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டார். இவரின் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் பல தடைகளை தாண்டி வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் நடிகர் கமலஹாசன் உட்பட பல திரைப் பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக எழுந்துள்ளது.

இயக்குனர் சங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு அடுத்ததாக இயக்கப் போகும் படத்தின் கதையை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வேள்பாரி என்ற நாவலை இயக்குனர் சங்கர் அடுத்ததாக இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் இருவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியானது.

எனவே இயக்குனர் சங்கர் அடுத்ததாக இயக்கும் வேள்பாரி திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது நடிகர் அஜித் ரசிகர்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.