காமாட்சி விளக்கு ஏற்றும் போது இதை செய்தால் பெரிய அபசகுனம்!! மறந்தும் இதை செய்துவிடாதீர்கள்!!

0
528
If you do this while lighting the kamakshi lamp, it is a bad omen!! Don't forget to do this!!
If you do this while lighting the kamakshi lamp, it is a bad omen!! Don't forget to do this!!

காமாட்சி விளக்கு ஏற்றும் போது இதை செய்தால் பெரிய அபசகுனம்!! மறந்தும் இதை செய்துவிடாதீர்கள்!!

Kamatchi vilakku deepam: பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று. இந்து சாஸ்திரத்தின் படி நமது முன்னோர்கள் பலவகையான சாஸ்திரங்களை வகுத்து வைத்துள்ளனர். அதில் நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழிபாடு என்றால் வெள்ளி, செவ்வாய் விளக்கேற்றி வழிபடுவது தான்.

பெரிய அளவில் பூஜைகள் எதுவும் செய்யவில்லை என்றாலும் கட்டாயம் வாரத்தில் இந்த இரு நாட்களும் அல்லது சில வீடுகளில் தினம்தோறும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுவது நம் வழக்கங்களில் ஒன்று. இந்து சாஸ்திரத்தில் ஒரு புது வீடு கட்டி பால் காய்ச்சினாலோ அல்லது திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு ஒரு வீட்டிற்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் முக்கிய இடத்தை பெறுவது எதுவென்றால் காமாட்சி விளக்கு தான்.

காமாட்சி விளக்கில் நாம் விளக்கேற்றும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளன. ஆனால் காமாட்சி விளக்கு ஏற்றும் பொழுது தவறுதலாக நாம் செய்யும் சில விஷயங்கள் நம் வீட்டிற்கு கஷ்டங்களை கொடுக்கலாம். காமாட்சி விளக்கு ஏற்றும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி நாம் இந்த பதிவில் (kamatchi Amman vilakku etrum murai eppadi) காண்போம்.

காமாட்சி விளக்கு ஏற்றும் முறைகள்:

ஒரு வீட்டில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் மற்றும் மாலை பிரதோஷ நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஐஸ்வரியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷமானது. அவ்வாறு நாம் பிரம்ம முகூர்த்த நேரம், பிரதோஷ நேரம், வெள்ளி, செவ்வாய் மற்றும் பல விசேஷ நாட்களில் விளக்கு ஏற்றும் பொழுது காமாட்சி விளக்கை தரையில் வைத்து ஏற்றக் கூடாது.

வாரத்தில் கட்டாயம் இரு நாட்கள் விளக்கு ஏற்றுவதால் நாம் விளக்கை சுத்தம் செய்வதில்லை. இருந்தாலும் தொடர்ச்சியாக நாம் காமாட்சி விளக்கு ஏற்றும் பொழுது அந்த விளக்கில் கரைகள், பாசிகள் படிந்திருக்கும். அவைகள் விளக்குகளில் இல்லாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சுத்தம் இல்லாத விளக்கில் விளக்கு ஏற்றுவது நம் வீட்டிற்கு கஷ்டங்கள் மற்றும் கவலைகளை உருவாக்கும்.

மேலும் ஒரே திரியில் விளக்கு ஏற்றுவது நல்லதல்ல. எனவே ஒவ்வொரு முறையும் விளக்கு ஏற்றும் பொழுது ஒரு புது திரி கொண்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

மேலும் அம்மனுக்கு எண்ணெய்களில் விளக்கு ஏற்றுவதை விட பசும் நெயில் விளக்கு ஏற்றுவது விசேஷமானது. அவ்வாறு தினம்தோறும் நெய்யில் விளக்கு ஏற்ற முடியாதவர்கள், செவ்வாய் வெள்ளி அன்று அல்லது விசேஷமான நாட்களில் நெய்யில் விளக்கேற்றினால் வீட்டில் செல்வம் தங்கும்.

மேலும் காமாட்சி அம்மன் விளக்கை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

காமாட்சி அம்மன் விளக்கில் அம்மன் படமும் இருபுறமும் இரு யானைகள் உருவமும் பதிக்கப்பட்டு இருக்கும். கட்டாயம் யானையின் உருவத்திற்கு குங்குமம் வைக்க வேண்டும். மேலும் விளக்கின் பின்புறமும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். விளக்கு வைக்கும் தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மேல் காமாட்சியம்மன் விளக்கை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு நீர் ஊற்றி அதில் பூக்களை தூவி சிறிது மஞ்சள் குங்குமம் கலந்து அந்த நீரின் மேல் விளக்கு வைத்து தீபம் ஏற்றி வந்தால் மிகவும் விசேஷமானது.

பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு ஐஸ்வரியம் உண்டாக்கும்.

எப்பொழுதும் விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி வைக்க வேண்டும். திரியை வைத்துவிட்டு எண்ணெய் ஊற்றுவது தவறான செயலாகும்.

மேலும் தீபம் ஏற்றும் பொழுது தீபம் அதிகமாக எரியக் கூடாது அவ்வாறு எரியும் பொழுது விளக்கில் வைத்த மஞ்சள் குங்குமம் கருகும். இது அபசகுணமாகும். எனவே தீபம் குறைந்த அளவில் எரிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.