MTC Bus Chennai: தமிழகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலை தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். மேலும் நடந்து செல்லும் பல பாதசாரிகளும் பேருந்தின் சக்கரத்தில் அடிப்பட்டு இறந்துவிடுகிறார்கள். இதனை தவிர்க்கும் பொருட்டு பேருந்துகளின் இரு பக்கவாட்டிகளிலும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுவதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தனது எக்ஸ்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பதிவில் பேருந்துகளின் இருபுறமும் கீழ்ப்பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கு மொத்தம் 20212 பேருந்துகளை தேர்வு செய்துள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக 600 பேருந்துகளில் அண்டர் ரன் ப்ரொடெக்ஷன் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது கட்டமாக 1612 பஸ்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 715 பஸ்களில் இந்த பாதுகாப்பு வசதி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பேருந்துகளிலும் இந்த பாதுகாப்பு கம்பியை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடப்பதாகவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!