வெள்ளி செவ்வாய் வீடு துடைத்தால் என்ன நடக்கும்? மறந்தும் இதை செய்யாதீர்கள்..!

0
367
veedu suththam seiyum kizhamai
#image_title

நம்முடைய முன்னோர்கள் நாம் எது செய்தாலும், அதற்கான விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் நாம் செய்யும் அல்லது தாெடங்க நினைக்கும் செயல்களுக்கு நல்ல நேரம், காலம் பார்த்து செய்வோம். அந்த வகையில் நமது இந்து சாஸ்திரத்தின் படி ஒரு சில விஷயங்களை நாம் செய்யலாம். செய்யகூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கட்டாயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.

அந்த வகையில் வெள்ளி, செவ்வாய் நம் வீட்டு மற்றும் பூஜை அறைகளை துடைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் (veedu suththam seiyum kizhamai) பார்க்கலாம்.

வெள்ளி செவ்வாய் வீடு துடைப்பதால் ஏற்படும் விளைவு

பொதுவாக அனைவரின் வீடுகளில் வெள்ளி செவ்வாய் அன்று தூபம் போடுவது வழக்கம். அன்று இரு நாட்கள் வீடு, பூஜை அறைகளை சுத்தம் செய்துவிட்டு விளக்கேற்றி வழிபடுவது நம்முடைய சாஸ்திரம். அந்த வகையில் செவ்வாய் கிழமையும், வெள்ளிக்கிழமையும் வீட்டை துடைக்க கூடாது என நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாய், வெள்ளி இந்து சாஸ்திரத்தின் படி முக்கிய நாளாக கருதப்படுகிறது. அதாவது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த இரு தினங்களும் மகாலெட்சுமிக்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் நாம் சுத்தம் செய்து துடைத்தால், வீட்டில் உள்ள லெட்சுமி கடாக்ஷம் நம்மை விட்டு போய் விடும் என கூறப்படுகிறது.

அதனால் செவ்வாய் கிழமைக்கு முதல் நாள் திங்கட் கிழமையும், வெள்ளி கிழமைக்கு முதல் நாள் வியாழக்கிழமை இந்த இரு தினங்களும் வீட்டை துடைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் கட்டாயம் இந்த இரு தினங்கள் துடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், காலை 6 மணிக்குள்ளாக துடைத்துக்கொள்ளலாம். மேலும் மாலை 6 மணிக்குள் துடைக்க வேண்டும். மேலும் இந்த இரு நாட்கள் முக்கிய பூஜைகள், விசேஷங்கள் இருந்தால் முதல் சுத்தம் செய்வது சிறப்பு. ஏனெனினல் பூஜை நேரத்தில் இந்த வேலையை பார்த்து கொண்டு இந்தால் பூஜைகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

மேலும் அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் வீட்டையும், பூஜை அறையும் சுத்தம் செய்ய வேண்டாம்.

மேலும் படிக்க: காமாட்சி விளக்கு ஏற்றும் போது இதை செய்தால் பெரிய அபசகுனம்!! மறந்தும் இதை செய்துவிடாதீர்கள்!!