மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து மார்ச் 16 முதல் ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தல் விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் இருந்தது. மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் சமயத்தில் அரசு சார்பாக எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்க இயலாது.
அதன்படி ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும், தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறையின் படி, ஒரு தனிநபர் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர், பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர், வீடியோ கண்காணிப்பு குழு போன்றவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி உரிய ஆவணங்கள் இன்றி தங்கம், வெள்ளி, பரிசுப் பொருட்கள், போதைப்பொருள்கள், மதுபானங்கள் போன்றவை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த நாளில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் பிற பொருள்களை உரிய ஆவணங்கள் காண்பித்தவர்கள் மட்டுமே அந்த பொருள்களை திரும்ப பெற்றுச் சென்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை ஜூன் 6-ம் தேதி நள்ளிரவோடு திரும்பப்பெற்ற காரணத்தினால் இனி பொருள்கள் பணம் கொண்டு செல்வதில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிய திட்டங்களை அறிவிக்கலாம் எனவும் அதற்கு நிதி ஒதுக்க எந்த ஒரு தடையும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அல்லது குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய (ration card update news in tamil) இனி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதியின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு வழங்கும் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் இனி தொடர்ந்து நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை பெற நினைப்பவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் விண்ணப்பித்த மனுக்களை ஆய்வு செய்து அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிதாக ரேஷன் அட்டைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஸ்மார்ட் கார்ட் பெற நினைப்பவர்கள் https://www.tnpds.gov.in இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அல்லது இ சேவையின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் போன்ற அனைத்து சேவைகளையும் இனி பெற எந்தவித கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 50% மானியத்துடன் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம்… முழு விவரம் உள்ள…