இனி இன்ஸ்டா யூடியூப் இல்லை ட்விட்டர் தான்!! எலான் மஸ்கின் பலே ஐடியா!!

0
179
new updates in twitter
#image_title

தற்போது அனைவரின் மத்தியிலும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் மற்றும் யூடியூபில் உள்ள ஷார்ட்ஸ் வீடியோக்கள் தான். இவைகளில் பெரும்பாலான மக்கள் தங்களின் நேரத்தை செலவிடுகிறார்கள். இதற்கு போட்டியாக தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ பகிர்வு அம்சத்தை கொண்டு வர உள்ளார் எலான் மஸ்க்.

கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார். பிறகு ட்விட்டர் என்னும் பெயரை எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் தினம்தோறும் எக்ஸ் தளத்தில் ஏதோ ஒரு மாற்றம் செய்து அப்டேட் (new updates in twitter) செய்யப்பட்டு கொண்டிருந்தது. அதன் பிறகு எக்ஸ் தளத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளும் வந்து கொண்டிருந்தன.

அதற்கான காரணத்தை அவ்வப்போது எக்ஸ் தள அதிகாரிகள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் வீடியோ பகிர்வை அடிப்படையாக மட்டும் கொண்ட ஒரு அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தற்போது instagram-ல் இருக்கும் ரீல்ஸ் மற்றும் யூடியூபில் இருக்கும் ஷார்ட்ஸ் போன்றவற்றிற்கு போட்டியாக எக்ஸ் தளத்தில் இது போன்ற வீடியோ பகிர்வை அவர் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எக்ஸ் தளம் முன்னதாக twitter ஆக இருக்கும் பொழுது அதில் வைன் என்ற ஒரு வீடியோ பகிர்வு முறை பயன்பாட்டில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அது ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது. பிறகு கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் வாக்கெடுப்பு ஒன்று நிகழ்த்தினார். அதில் வைன் அம்சத்தை திரும்பக் கொண்டு வரலாமா? என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு 70% பேர் கொண்டு வரலாம் என கருத்து தெரிவித்ததால் எக்ஸ் தளத்தில் புதிய அம்சத்துடன் கூடிய வீடியோ பகிர்வு அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் எக்ஸ் தளத்தின் (X new update) தலைமை செயல் அதிகாரி இதற்காக முழுவீச்சில் இறங்கி உள்ளதாகவும், மேலும் நேரலையாக எக்ஸ் தளத்தில் வீடியோக்களை ஒளிபரப்பு செய்வதற்கு பிரபலங்களுடனும், விளையாட்டு வீரர்களுடனும், ஊடக நிறுவனங்களுடனும், ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ பகிர்வு முதலில் குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மட்டும் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அதன் பிறகு படிப்படியாக அனைத்து பயனாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: “ஓட்டுநர் உரிமம் பெற இனி இது அவசியம்” தமிழக அரசு அறிவிப்பு…!!