11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்!! குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்த அதிரடி திட்டம்!!

0
209
1000 per month for 11th and 12th class students!! An action plan taken by the government to prevent child marriages!!
1000 per month for 11th and 12th class students!! An action plan taken by the government to prevent child marriages!!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்!! குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்த அதிரடி திட்டம்!!

அசாம் அரசு குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக “நிஜீத் மொய்னா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். முன்பு போல் இல்லாது குழந்தை திருமணங்கள் குறைந்துவிட்டாலும், முழுமையாக நின்று விடவில்லை. மேலும்  சில இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் உள்ளது. இது போன்ற திருமணங்களை தடுப்பதற்காக அசாம் அரசு அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அசாமில் முதலமைச்சராக பதவி வகிக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மா குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் “நிஜீத் மொய்னா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் 11ம் வகுப்பு முதல் முதுகலை வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இதற்காக ரூபாய் 1500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் திருமணத்தை தாமதப்படுத்தலாம். பெண் குழந்தைகள் நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் இதனால் பள்ளியில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை உயரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிஜீத் மொய்னா திட்டத்தில் சேர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளும் தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எம்.எல்.ஏ, எம்பிக்கள் மகள்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000, பட்ட பட்டப்படிப்பு மாணவிகளுக்கு ரூபாய் 1250, முதுகலை மாணவிகளுக்கு ரூபாய் 2500 என வழங்கப்பட உள்ளது. அதேபோன்று இரண்டு மாத கோடை விடுமுறையின்  போது மட்டும் இந்த உதவி தொகை கிடைக்காது என்றும், ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்களுக்கு மட்டும் உதவி தொகை அந்தந்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்துள்ளது.

Previous articleகுவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!
Next articleஇலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!!