சவுதி அரேபியாவில் வீசும் கடும் வெப்ப அலை! 19 ஹஜ் பயணிகள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு!
சவுதி அரேபியா நாட்டில் தற்பொழுது கடும் வெப்ப அலை வீசி வருவதால் கடும் வெயிலை தாங்க முடியாமல் ஹஜ் பயணம் சென்ற 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உலகத்தில் பல வகையான மதங்கள் உள்ளது. அந்த மதங்களுக்கு ஏற்ப பல முக்கியமான வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகவும் இஸ்லாமிய மதத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகவும் மெக்காவில் உள்ள ஹஜ் வழிபாட்டு தலம் விளங்குகின்றது.
அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த ஹஜ் தலத்திற்கு வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அந்த வகையில் உலகில் பல பகுதிகளில் இருக்கும் லட்சக் கணக்கான மக்கள் மெக்காவில் உள்ள ஹஜ் வழிபாட்டுத் தலத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் கடந்த 15ம் தேதி தொடங்கியுள்ளது. ஏற்கனவே 15 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் வழிபாட்டு தலத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வருடம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ் பயணம் மேற்கெள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்த சமயத்தில் சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை வீசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 19 பேர்களில் 14 பேர் ஜோர்டன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது மெக்காவில் உள்ள ஹஜ்ஜிக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளில் 2760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா நாட்டின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.