நான்கு ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் மூன்று விக்கெட்!! பெர்குசன் செய்த வரலாற்றுச் சாதனை!!
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் நேற்று(ஜூன்17) நடைபெற்ற லீக் சூற்றில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெருகுசன் நான்கு ஓவர்கள் வீசி ஒரு. ரன். கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
நேற்று(ஜூன்17) நடைபெற்ற லீக் சுற்றில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் சேர்த்தது.
பப்புவா நியூ கினி அணியில் அதிகபட்சமாக சார்லஸ் அமினி 17 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
79 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 35 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெருகுசன் ஆட்டநாயகன் விருதை வாங்கினார்.
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெருகுசன் அவர்கள் 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சர்வதேச டி20 போட்டியிலும் சரி ஐசிசி20 உலகக் கோப்பை தொடரிலும் சரி ஒரு ரன்கூட கொடுக்காமல் 4 மெய்டன் ஓவர்களை வீசியவர் யாரும் இல்லை.
அந்த வகையில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை லாக்கி பெருகுசன் படைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 4 மெய்டன் ஓவர்களை வீசிய கனடா அணியின் சாத் ஃபின் அவர்களின் சாதனையை லாக்கி பெருகுசன் சமன் செய்துள்ளார்