தங்கம் போல உயரத் தொடங்கிய தக்காளி விலை! மீண்டும் பார்த்து பார்த்து தான் பயன்படுத்த வேண்டுமோ? 

Photo of author

By Sakthi

தங்கம் போல உயரத் தொடங்கிய தக்காளி விலை! மீண்டும் பார்த்து பார்த்து தான் பயன்படுத்த வேண்டுமோ?
சமையலுக்கு பயன்படுத்தப்படும் இன்றியமையாத பொருளாக இருக்கும் தக்காளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருப்பதால் மக்கள் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக சமையலில் இன்றியமையாத பொருளாக இருக்கும் தக்காளியின் விலை மட்டும் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே செல்கின்றது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் தக்காளியின் விலை சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 90 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில் விரைவில் தக்காளியின் விலை 100 ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து காய்களின் விலை அதிகரிப்பதால் மக்கள் தேவைகளை குறைத்து குறைவாகவே காய்கறிகளை வாங்குகின்றனர் என்றும் இதனால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக வியாபாரிகள் “காய்கறிகளின் விலைகள் அதிகரிக்க மழைதான் முக்கிய காரணமாகும். தக்காளியின் விலை அதிகரிப்பிற்கும் மழை தான் முக்கிய காரணமாகும். 4 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முதல் தர தக்காளி கிலோ 80 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் சிறிய ரக தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அரை கிலோ தக்காளி வாங்கிய மக்கள் தற்பொழுது கால் கிலோ மற்றும் கிராம் கணக்கில் தக்காளி வாங்குகின்றனர்.
மழையினால் செடிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் தான் வரத்து குறைகின்றது. கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழைகாலம் முடியும் வரை விலை அதிகரித்துக் கொண்டே செல்லும். மலை காலம் முடிந்த பின்னர் காய்கறிகளின் விலை குறையத் தெடங்கும்” என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.