வாக்களர் பதிவேட்டில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்..
போலி ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக எம்எல்ஏ நா.புகழேந்தியின் மறைவை தொடர்ந்து,அங்கு
இடைத்தேர்தல் வரும் ஜூலை 10, 2024 அன்று நடைபெற இருக்கிறது.இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழ்நாட்டின் பிரதான எதிர் கட்சியான அ.தி.மு.க கூறியுள்ளது.
இது தமிழக அரசியல் அரங்கில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதுக்கு காரணங்கள் பல கூறப்படுகிறது.அதில் முக்கியமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மேலும் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டு நெறி முறைகளை
பிறப்பித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளவை பின்வருமாறு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர். வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
வாக்களிக்க தேவைப்படும் மாற்று ஆவணங்கள்
(i) ஆதார் அட்டை
(ii) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை
(旧) புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
(iv) தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
(v) ஓட்டுநர் உரிமம்,
(vi) வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card),
(vii) தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
(viii) இந்திய கடவுச்சீட்டு.
(ix) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
(x) மத்திய/ மாநில அரசுகள்/ பொதுத் நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
(xi) பாரளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
(x) இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை
பதிவேட்டில் பெயர் இருத்தல் அவசியம் !!!
அதாவது ஓட்டு போட வரும் அனைத்து வாக்கரக்களர்களும் தங்களது பெயர் வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் ஓட்டு போட அனுமதிக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேலும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கு, ஐந்து (5) நாட்களுக்கு முன்னராக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும். வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.