உங்களுடைய முகம் வெள்ளையாக மாற வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத்தை இப்படி பயன்படுத்துங்க!! 

Photo of author

By Sakthi

உங்களுடைய முகம் வெள்ளையாக மாற வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத்தை இப்படி பயன்படுத்துங்க!! 

Sakthi

Want your face to turn white? So use orange fruit like this!!
உங்களுடைய முகம் வெள்ளையாக மாற வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத்தை இப்படி பயன்படுத்துங்க!!
கருமையான நிறம் கொண்ட உங்கள் முகத்தை வெள்ளையாக மாற்ற ஆரஞ்சு பழத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு முகம் வெயில் காரணமாக கருமையான நிறமாக மாறி இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு இயற்கையாகவே முகம் கருமையாகத் தான் இருக்கும். இயற்கையாக இருந்தாலும் வெயில் காரணமாக மாறி இருந்தாலும் பலரும் கருமையான நிறம் கொண்ட முகத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று பலவிதமான கிரீம்களை முகத்தில் பூசிக் கொள்வார்கள். இவ்வாறு பலவிதமான கிரீம்களை முகத்தில் பூசுவதால் முகம் வெண்மையாக மாறாது.
அதற்கு நாம் ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழம் என்றால் ஆரஞ்சு பழத்தின் தோலை நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகம் வெள்ளையாக மாறும். ஆரஞ்சு பழத் தோலில் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றது. இதை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* ஆரஞ்சு பழத் தோல்
* தயிர்
செய்முறை…
முதலில் ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் உலர்த்தி அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுலில் தேவையான தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த பவுலில் நாம் தயார். செய்து வைத்துள்ள ஆரஞ்சுப் பழத் தோலின் பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தேய்த்து காய்ந்த பின்னர் கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருமையான முகம் வெள்ளையாக மாறும்.