ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!
தமிழகத்தில் சமீப காலமாக அரசு பேருந்துகளின் சக்கரங்கள் கழன்று ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.சென்ற மாதம் கூட பழனியில் வேப்பன் வலசு பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து அதன் முன் பக்க சக்கரம் கழன்று ஓடி அங்குள்ள சாக்கடைக்குள் விழுந்தது.மேலும் அந்த சமயத்தில், பேருந்திலிருந்த பயணிகளுக்கு,எந்த வித காயங்களும் ஏற்படாத வகையில்,ஓட்டுனர் பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது நடந்து, ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே இதே மாதிரி மற்றொரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையில் அரங்கேறியுள்ளது.கன்னியாகுமரி பனச்சமூட்டிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிலை தடுமாறி அங்கும்,இங்கும் சாய்ந்தவாறு சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.மேலும் உடனே ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு ,ஆய்வு செய்து பார்த்த போது பேருந்தின் பின்னாடி உள்ள சக்கரத்தின் ஒரு சில பாகங்கள் சேதம் அடைந்து இருந்தன.
இதனை பார்த்த பயணிகள் அரசு போக்குவரத்து துறையில் அதிக கவனம் செலுத்தி நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை மட்டுமே அரசு இயக்க வேண்டும் இல்லையென்றால் இது போன்ற சம்பவங்களளால் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை வந்து விடும் என கூறினார்.இதனை கருத்தில் கொண்டு இனிமேலாவது தமிழக அரசு போக்குவரத்து துறையில் அதிக கவனம் செலுத்தி எல்லா வாகனங்களையும்,நல்ல தரத்தில் இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.இதேபோல சென்னையில் ஊர் பேருந்தின் மேற்கூரையின்றி ப்ளெக்ஸ் சீட் போட்டப்பட்ட வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தகது.
திராவிட அரசு என்ற பெயரில் மக்களின் வரிகளை சுருட்ட நினைக்கிறதே தவிர,மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில்லை.அவர்களின் உயிரை துச்சமென நினைப்பதே ஆளும் கட்சியின் வேலையாக உள்ளது.அதற்க்கு எடுத்துக்காட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் என்று கூறலாம்.அதுமட்டுமில்லாமல் இது போன்ற சம்பவங்கள் இனி வரும்,காலங்களில் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.